பெரியாச்சி எனும் தேவதை காளியின் அவதாரம் என்று பெரும்பான்மை யாக கருதப்படுகிறாள். முன்னொரு காலத்தில் பிராமணர் அல்லாோர் வணங்கித் துதித்த தெய்வம். ஆனால் காளியின் அவதாரம் என்பதால் காலப்போக்கில் பிராமணர்களும் வணங்க ஆரம்பித்தனர். ஸ்ரீகலியுக சிதம்பரர் திருக்கோயிலில் வற்றிருக்கும் பெரியாச்சி அம்மனைசோழிய செட்டியார், ராஜ கம்பள நாயக்கர், மற்றும் விஸ்வகர்மா ஆகிய சமுதாய மக்கள் அவர்களின் குல தெய்வமாக வணங்குகின்றனர். பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் அவர்களின் குலதெய்வமான பேச்சியம்மனாக வழிபடுகின்றனர். ஒருகிராமதேவதை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும். ஆனால் இங்கு பெரியாச்சி அம்மன் பல்வேறு சமுதாய மக்களால் குலதெய்வமாக வணங்கப்படுகிறாள். இஃது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
https://navsamaj.org/wp-content/uploads/2023/10/PERIACHI-AMMAN-IS-MARUTHUVACHI-WORSHIPPED-BY-ALL.docx.pdf